டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்: 8 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!

சூடானில் இடம்பெயர்ந்து சென்ற மக்களைக் குறிவைத்து சனிக்கிழமை(பிப். 7) தாக்குதல்கள் நடத்தப்பட்டது பற்றி...

News image
- கோப்பிலிருந்து படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 12:17 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கெய்ரோ : சூடானில் வாகனங்கள் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதல்களில் 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். மத்திய சூடானின் வடக்கு கோர்டோஃபேன் மாகாணத்தில் ரஹாத் நகரையொட்டி, துணை ராணுவப்படையின் கிளர்ச்சியாளர் பிரிவால் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூடானில் நீடிக்கும் உள்நாட்டுச் சண்டை காரணமாக, இடம்பெயர்ந்து சென்ற மக்களைக் குறிவைத்து சனிக்கிழமை(பிப். 7) தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், வாகனங்கள் மீதான தாக்குதல்களில் 2 கைக்குழந்தைகளுடன் சேர்த்து மொத்தம் 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல்களில் பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் ரஹாத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சூடானில் அப்பாவி மக்கள் மீதான கொடுஞ்செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் சூடானிய மருத்துவர்கள் வளையம், அங்குள்ள மக்களைக் காக்க சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் அமைப்புகளும் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வலியுறுத்தியுள்ளது.

summary

A drone attack by a notorious paramilitary group hit a vehicle carrying displaced families in central Sudan Saturday, killing at least 24 people, including eight children, a doctors' group said, a day after a World Food Program aid convoy was targeted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.