நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

6 ஆண்டுகளுக்குப் பின்.. சீனாவின் ஷாங்காய்க்கு ஏர் இந்தியா நேரடி விமான சேவை!

தில்லி - ஷாங்காய் இடையே 6 ஆண்டுகளுக்குப்பின் நேரடி விமான சேவை

News image
- @airindia
Updated On :1 பிப்ரவரி 2026, 3:25 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி - ஷாங்காய் இடையே 6 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில், இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தத நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்குப்பின் 2026, பிப்ரவரியில் இருநாடுகளுக்குமிடையே மீண்டும் நேரடி விமானம் இயக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் மாநகரின் புடோங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புது தில்லிக்கு 230 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம் இன்று(பிப். 1) காலை புறப்பட்டது என்று இந்தியத் தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மக்கள் தொடர்பு, வணிகம், கல்வி உள்பட நிறுவன ரீதியான தொடர்பு ஆகியவற்றுக்கு இந்த விமான சேவை பலனிக்கும் என்று இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

summary

Air India resumes direct Shanghai-New Delhi flights after nearly six years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.