டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணமா? இத்தாலி நாளிதழ் தகவலுக்கு எதிர்ப்பு!

‘ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியே காரணம்’ என இத்தாலியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளதைப் பற்றி...

News image
அகமதாபாத் விமான விபத்து. (உள்படம்: சுமீத் சபர்வால்)
Updated On :12 பிப்ரவரி 2026, 3:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

‘ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியே காரணம்’ என இத்தாலியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு (2025) ஜூன் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேலெழும்பிய சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த பிஜே மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விடுதியில் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானிகள், பணியாளர்கள், விமானப் பயணிகள் 241 பேர், கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள், பொதுமக்கள் உள்பட 19 பேர் என மொத்தமாக 260 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், இத்தாலியைச் சேர்ந்த கோரியர் டெல்லா செரா (Corriere della Sera) என்ற நாளிதழ், ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை. என்ஜினுக்கு எரிபொருளை அனுப்பும் ஸ்விட்ச்சை விமானி வேண்டுமென்றே ஆஃப் செய்ததால் விபத்து நேர்ந்ததாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தத் தகவலை மறுத்து, எதிர்ப்பு தெரிவித்துள்ள விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (ஏஏஐபி), அந்த நாளிதழின் கூற்றுக்கள் “தவறானவை மற்றும் அவை வெறும் ஊகங்கள்” என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகள், ஸ்விட்ச் தானாக ஆஃப் ஆக வாய்ப்பே இல்லையென்றும், கேப்டன் சுமீத் சபர்வால் ஸ்விட்ச்சை ஆஃப் செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, 260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில் ‘விமானியின் பங்கு என்ன?’ என்பது குறித்தும், அகமதாபாத் ஏர் இந்தியா விபத்துக்கு சில நொடிகளுக்கு முன், எரிபொருள் ஸ்விட்ச் அணைக்கப்பட்டுள்ளது. மூத்த பைலட் சுமீத் சபர்வாலிடம் துணை பைலட் விசாரித்தபோதும் அவர் அமைதியாக இருந்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்காவைச் சேர்ந்த ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தித்தாளின் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The Aircraft Accident Investigation Bureau said the investigation is still ongoing, no final conclusions have been reached, and unverified reporting risks causing public anxiety and undermining the integrity of the process.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.