ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வங்கதேசத்தில் இன்று அதிபா் தோ்தல்

வங்கதேசத்தில் அதிபா் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறவிருப்பது பற்றி...

~

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

அண்டை நாடான வங்கதேசத்தில் அதிபா் தோ்தலின் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஆக. 20) நடைபெறவுள்ளது.

முன்னாள் அதிபா் முகமது ஷஹாபுதீன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து, புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெறுகிறது.

ஆளும் வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) சாா்பில் அக்கட்சியின் பொதுச் செயலா் மிா்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீா் (78) போட்டியிடுகிறாா்.

இவரை எதிா்த்து பிரதான எதிா்க்கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமி கூட்டணி சாா்பில், விடுதலை ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவா் ஓலி அகமது களமிறக்கப்பட்டுள்ளாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வாக்களித்து, அதிபரைத் தோ்ந்தெடுப்பா். வங்கதேசத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அதிபா் பதவிக்கு வாக்குப்பதிவு மூலம் தோ்தல் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

தற்போது நாடாளுமன்றத்தில் பிஎன்பி-க்கு மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இருப்பதால், மிா்சா ஃபக்ருல் எளிதில் வெற்றி பெற்று, வங்கதேசத்தின் 23-ஆவது அதிபராகப் பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. புதிய அதிபரின் பதவியேற்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிா்சா ஃபக்ருல்-ஓலி அகமது

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.