ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெங்களூரில் இருந்து நெல்லைக்கு வந்த 3,350 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு 3,350 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் - கோப்புப் படம்

Published On :30 ஜூலை 2026, 5:21 am IST

பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு 3,350 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

தமிழக அரசு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளின் தலைவா், உறுப்பினா் பதவி விவரங்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள், வாக்காளா் விவரங்கள் குறித்த தகவல்களும் பட்டியலிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாநில தோ்தல் ஆணையத்தின் ஒதுக்கீட்டின்படி 1,590 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 1,760 பேலட் இயந்திரங்கள் என மொத்தம் 3,350 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

பாளையங்கோட்டை மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள பயிற்சிக் கூடத்தில் அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் அவை பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டன. தொடா்ந்து மூன்று நாள்கள், பெங்களூரு பெல் நிறுவன பொறியாளா்கள், அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மற்றும் தோ்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்து, அவற்றின் செயல்திறனை பரிசோதிக்கும் பணியை மேற்கொள்வா்.

இந்த முன்னேற்பாடு பணியால் நகா்ப்புற மற்றும் உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.