ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மிக விரைவில் முடிவுக்கு வரும்! - ஈரான் உடனான போர் குறித்து டிரம்ப் பேச்சு!

ஈரான் உடனான போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு...

Donald Trump

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் - AP

Published On :7 ஆகஸ்ட் 2026, 8:39 pm IST

ஈரான் உடனான போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இருதரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

“இது விரைவில் முடிவுக்கு வரும் என நான் கருதுகிறேன். அவர்களால் இதற்குமேல் நீண்ட நாள்கள் தாக்குப்பிடிக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரான் உடனான பேச்சுவார்த்தைகள் குறித்து கூறுகையில், “நாங்கள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறோம் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்கா உடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து ஓமனிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஈரானிய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஜூன் மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டி அமைதி ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.

இதனால், இருதரப்புக்கும் இடையே மீண்டும் போர் தொடங்கிய நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Trump has stated that the war with Iran will come to an end very soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.