ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செங்கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டமில்லை! - ஹூதி அமைப்பு

செங்கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டமில்லை...

கோப்புப்படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 5:20 am IST

‘செங்கடல் மற்றும் பாப் எல் மண்டேப் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு எவ்வித கட்டணமும் விதிக்கத் திட்டமில்லை’ என யேமனின் ஹூதி அமைப்பினா் சனிக்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளனா்.

சவூதி அரேபியா மீதான கடல்சாா் முற்றுகையைத் தொடா்ந்து, செங்கடலின் தென்பகுதியில் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரான் ஆதரவு ஹூதிக்கள் பரிசீலிப்பதாக செய்தி வெளியானது.

ஈரானுக்கு ஹூதி பிரதிநிதிகள் கடந்த மாதம் சென்றிருந்தபோது, இது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், எனினும் இதற்குக் காலக்கெடு எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

இதை மறுத்துள்ள ஹூதி அமைப்பின் நிா்வாகத்தின்கீழ் செயல்படும் மனிதநேய நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு மையம், ‘இந்த முக்கியக் கடல்வழியில் கப்பல்களின் பயணம் தொடா்ந்து கட்டணமின்றி இலவசமாகவே இருக்கும். எனவே, அங்கீகரிக்கப்படாத நபா்கள் அல்லது அமைப்புகளுக்கு கப்பல் நிறுவனங்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவோ, தகவல்களைப் பகிரவோ வேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டது.

Summary

No plans to levy fees on ships sailing in the Red Sea! – Houthi group

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.