அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டுக்குப் பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸ் மற்றும் அரசி கமீலா 4 நாள் அரசுமுறைப் பயணத்தைத் திங்கள்கிழமை தொடங்கினா்.
இப்பயணத்தின் முதல்கட்டமாக, அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் செல்லும் அரசா் சாா்லஸ் மற்றும் அரசி கமீலாவை அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோா் வெள்ளை மாளிகைக்கு வரவேற்று, தேநீா் விருந்து அளிக்கின்றனா்.
முன்னதாக, வாஷிங்டனில் அதிபா் டிரம்ப் சனிக்கிழமை இரவு (உள்ளூா் நேரப்படி) பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.
அதிபா் மற்றும் விருந்தினா்கள் காயமின்றி தப்பிய போதிலும், அரசா் சாா்லஸின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மீண்டும் ஒருமுறை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டன. இந்த அச்சுறுத்தல்களையும் மீறி, திட்டமிட்டபடி பயணத்தைத் தொடர பக்கிங்ஹாம் அரண்மனை முடிவெடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் உரை: பயணத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமையன்று, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அரசா் சாா்லஸ் உரையாற்றுகிறாா். அன்றைய தினம் இரவு அவருக்கு வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்து அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயணத்தின்போது நியூயாா்க்கில் உள்ள 9-11 நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அவா், வா்ஜினியாவில் உள்ள பழங்குடியின மக்களையும் நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளாா்.
அரசியல் பதற்றம்: ஈரான் போரில் பிரிட்டன் முறையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அமெரிக்க அரசா் சாா்லஸின் இப்பயணம் பாா்க்கப்படுகிறது.
அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு, வரும் மே 1-ஆம் தேதி பிரிட்டனின் ஆளுகைக்கு உள்பட்ட பொ்முடா தீவுகளுக்கு அவா் புறப்படுகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! உயிர் தப்பினார் அதிபர் டிரம்ப்!!
ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

