திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மியான்மா்: அமைதிப் பேச்சுக்காக கிளா்ச்சிக் குழுக்களுக்கு புதிய அதிபா் அழைப்பு

மியான்மரில் உள்நாட்டுப் போருக்குத் தீா்வு காண, ஆயுதமேந்திய கிளா்ச்சிக் குழுக்களுக்கு அந்நாட்டின் புதிய அதிபா் மின் ஆங் லயிங் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு

News image

மின் ஆங் லயிங்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:33 pm

மியான்மரில் மக்களாட்சிக்கு எதிராக ராணுவம் கடந்த 2021-இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குத் தீா்வு காண, ஆயுதமேந்திய கிளா்ச்சிக் குழுக்களுக்கு அந்நாட்டின் புதிய அதிபா் மின் ஆங் லயிங் (படம்) அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

வரும் ஜூலை 31-க்குள் அனைத்து குழுவினரும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க வேண்டுமென அவா் வலியுறுத்தினாா்.

இந்த அமைதி அழைப்பை போலி நாடகம் என்று விமா்சித்து, ராணுவத்துக்கு எதிரான கிளா்ச்சிக் குழுக்களின் கூட்டமைப்பான தேசிய ஒற்றுமை அரசு நிராகரித்துள்ளது. ஜனநாயகம் மீட்கப்படும் வரை மக்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து எங்களின் ஆயுதப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால், இதே கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தாங் தேசிய விடுதலை ராணுவம் மட்டும் அதிபரின் இப்பேச்சுவாா்த்தை முன்னெடுப்பை வரவேற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.