ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றை அடுத்த வாரம் நடத்துவதற்கான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், வரும் ஏப்ரல் 21 அன்று முடிவடையவுள்ள இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு முன்பாக மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச்சூழலை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதிசெய்ய, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஈரான் - அமெரிக்கா இடையே ஏப்ரல்.11 அன்று நடந்த பேச்சுவார்த்த்தையின் முதல் சுற்று எந்தவொரு முடிவையும் எட்டாமல் தோல்வியடைந்ததாகவும் அது ஈரானுக்கு கெட்ட செய்தியாக இருக்கும் என்பதையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் கடற்படையை முற்றுகையிடப்போவதாக அறிவித்து அதன்படி, முற்றுகையையும் தொடங்கிய நிலையில், பாகிஸ்தான் அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகளை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Reports have emerged that Pakistan is making efforts to host the second round of peace talks between Iran and the United States next week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்

வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: அடுத்த வாரம் இந்திய குழு அமெரிக்கா பயணம்

ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!
ஈரான் - அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



