லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுக்குத் தயாா்: ஈரான் தூதா்

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதா் முகமது ஃபதாலி தெரிவித்துள்ளாா்.

News image

தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த இந்தியாவுக்கான ஈரான் தூதா் முகமது ஃபதாலி

Updated On :14 ஏப்ரல் 2026, 12:14 am

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதா் முகமது ஃபதாலி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில் அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையின்போது நியாயமற்ற நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்தது. இதனால் அந்தப் பேச்சுவாா்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது. ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றால், மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவது சாத்தியமாகும்.

ஈரானின் கடற்பரப்பில் ஹோா்முஸ் நீரிணை உள்ளது. ஈரானால் என்ன செய்ய முடியும், அதன் திறன்கள் என்னவென்பதை அமெரிக்கா நன்கு அறியும் என்று தெரிவித்தாா்.