லெபனான் மீதான போரில், அந்நாட்டைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில், அல் மனார் எனும் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அலி ஷோயப் கடந்த மார்ச் 28 அன்று கொல்லப்பட்டார்.
அலி ஷோயபின் கொலைக்குப் பொறுப்பேற்ற இஸ்ரேல் ராணுவம் அவர் ஹிஸ்புல்லாவின் ராத்வான் பிரிவில் செயல்பட்டு வந்ததாகக் குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், அல் மயாதீன் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஃபுதூனி மற்றும் அவரது சகோதரரும், ஒளிப்பதிவாளருமான முகமது ஃபுதூனி ஆகியோரைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் ராணுவம், அவர்களும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையில் இயங்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. நிபுணர்கள் வியாழக்கிழமை (ஏப். 2) அன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பத்திரிகையாளர்களைக் குறிவைத்துக் கொல்வதையும், பின்னர் அதற்கு நம்பத்தகுந்த ஆதாரத்தையும் வழங்காமல் அவர்கள் ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவதையும் இஸ்ரேல் தற்போது ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, காஸா மற்றும் லெபனானில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் தாக்குதல்களில் 231 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இதில், காஸாவில் மட்டும் 210 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
UN experts have urged that an international investigation be conducted into the killing of three Lebanese journalists by Israel.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்! போர் விமானத்தை விரட்டிய ஹிஸ்புல்லா?

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலின் பலி எண்ணிக்கை 773! 103 குழந்தைகள் கொலை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



