Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
ரஷியாவின் லுக்ஆயில், ரோஸ்னெஃப்ட் ஆகிய இரு பெரும் எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் சமீபத்திய தடையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவிடம் இருந்து மானிய விலையிலான கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாகக் குறைப்பதுடன், அமெரிக்காவிடம் இருந்து பெட்ரோலியப் பொருள்களை இறக்குமதி செய்வது குறித்து இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கத் தடைக்கு பிறகு மேற்கண்ட நிறுவனங்களிடம் இருந்து புதிய கொள்முதலுக்கான நடைமுறையை இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் சமீபத்திய தடையின் தாக்கங்கள் குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது. உலகளாவிய சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப நமது முடிவுகள் இயல்பாக மேற்கொள்ளப்படுகின்றன. 140 கோடி குடிமக்களின் எரிசக்தி தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதே நன்கு அறியப்பட்ட நமது நிலைப்பாடாகும்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருதரப்பும் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன என்றாா் அவா்.
ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தும் என்று கடந்த சில வாரங்களாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தொடா்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
சாபஹாா் துறைமுகம்-விதிவிலக்கு நீட்டிப்பு:
ஈரானில் இந்தியாவின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்பட்டு வரும் சாபஹாா் துறைமுகத்துக்கு அமெரிக்கா கடந்த மாதம் பொருளாதாரத் தடை விதித்தது.
இருதரப்பும் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பின் துறைமுக செயல்பாடுகளைத் தொடர இந்தியாவுக்கு ஒரு மாத காலம் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த விதிவிலக்கை, மேலும் 6 மாதங்களுக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளதாக ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி மீண்டும் அதிகரிப்பு

இந்தியா மீதான வரி குறைக்கப்படும்- அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் இந்தியா- அமெரிக்க தடை எதிரொலி
ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க வரி: மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதியை அதிகப்படுத்த இந்தியா திட்டம்


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

