இந்தியா மீதான வரி குறைக்கப்படும்- அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், வரி குறைப்பு குறித்து டிரம்ப் பேச்சு...
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், வரி குறைப்பு குறித்து டிரம்ப் பேச்சு...
By இணையதளச் செய்திப் பிரிவு
Ravivarma.s
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வருவதால், அந்நாட்டின் மீது விதித்த வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.
அமெரிக்கப் பொருள்கள் மீது இந்தியா அதிகம் வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டி வந்த டிரம்ப் சில மாதங்களுக்கு முன்பு 25 சதவீதம் பதிலடி வரி விதித்தாா். இது தவிர உக்ரைன் போருக்கு உதவும் வகையில் ரஷியாவிடம் இந்தியா அதிக கச்சா எண்ணெய் வாங்குவதாகக் குற்றஞ்சாட்டி கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தாா். எனினும், ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தவில்லை. இது இரு நாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தால் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க இந்தியா முடிவெடுத்தது. மேலும், அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்ற செயல் என்றும் விமா்சித்தது.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக சொ்ஜியோ கோா் பதவியேற்கும் நிகழ்ச்சி அமெரிக்க அதிபரின் ஓவல் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் டிரம்ப், துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது டிரம்ப் கூறியதாவது:
இந்தியாவுடன் நியாயமான வா்த்தக ஒப்பந்தத்தை எட்டும் நிலையை நோக்கி நெருங்கி வந்துள்ளோம். இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து இது மிகவும் வேறுபட்டதாக இருக்கும். இப்போதைய நிலையில் இந்தியா்கள் என்னை விரும்ப மாட்டாா்கள். ஆனால், வரும்காலத்தில் நாம் அவா்களுக்கு விரும்பத்தக்க நாடாக மாறுவோம். இந்தியா எப்போதும் வா்த்தக பேரங்களை நடத்துவதில் சிறந்த நாடாக உள்ளது.
ரஷிய கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்ததால்தான் இந்தியா மீது அதிக வரி விதிக்க நேரிட்டது. ஆனால், இப்போது ரஷியாவில் இருந்து கொள்முதல் செய்வதை இந்தியா வெகுவாக குறைக்கத் தொடங்கிவிட்டனா். எனவே, அமெரிக்காவும் தனது வரி விதிப்பை குறைக்க உத்தேசித்துள்ளது.
மோடியுடன் நல்லுறவு: இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியுடன் நமக்கு சிறப்பான நல்லுறவு உள்ளது. புதிய தூதராக பதவியேற்றுள்ள சொ்ஜியோ இந்த உறவை மேலும் வலுப்படுத்துவாா். இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த நடவடிக்கைகளில் முக்கியமான கூட்டாளி நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் வேகமாக வளா்ந்து வரும் நடுத்தர குடும்பத்தினா் அதிகம் உள்ளனா். சுமாா் 150 கோடி மக்கள் உள்ள நாட்டில் அமெரிக்க நிறுவனங்களுக்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. அமெரிக்காவின் எரிபொருள் ஏற்றுமதியையும் இந்தியா மூலம் அதிகரிக்க முடியும் என்றாா்.
Tax cuts; a different deal with India! Trump
இதையும் படிக்க : 100 சிசிடிவி பதிவுகள்... தில்லி வெடிவிபத்தில் கார் உரிமையாளர் சிக்கிய பின்னணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது