கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்!
சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால் கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால் கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vanisri
துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வந்து அங்கிருந்து இந்தியா திரும்ப இருந்த 150 தமிழர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் உணவின்றி தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கனமழை பெயதுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருக்கிறார்கள். சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கனமழை காரணமாக, இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்திலிருந்து விமானங்கள் கடந்த 3 நாள்களாக இயக்கப்படாததால், துபை, குவைத் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கொழும்பு வந்த இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு விமான நிலையத்தில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், ஏராளமானோர் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிட்வா புயல் காரணமாக இலங்கையின் கொழும்பு விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால், 150 தமிழர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொழும்பு விமான நிலையத்தில் தவித்து வருகிறார்கள்.
300 Indians are stranded at Colombo Airport due to the lack of flights to Chennai.
இதையும் படிக்க.. தங்கம் விலை மீண்டும் ரூ.95 ஆயிரத்தைக் கடந்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது