இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் நாசர்
இலங்கை விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் நாசர் உறுதி.
இலங்கை விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் நாசர் உறுதி.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vanisri
சென்னை: இலங்கையில் கனமழை, வெள்ளம் காரணமாக, விமானங்கள் இயக்கப்படாமல் கொழும்பு விமான நிலையத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்படாததால், கொழும்பு விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட தமிழர்கள், தாயகம் திரும்ப முடியாமல் தவிப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் உறுதி அளித்துள்ளார். இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, விமான நிலையத்தில் இருக்கும் தமிழர்கள் உள்பட இந்தியர்களுக்கு உதவ கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
துபாயிலிருந்து இந்தியா வர வேண்டியவர்கள், இலங்கையில் இறங்கி, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வரவிருந்தனர். ஆனால், டிட்வா புயல் காரணமாக விமானங்கள் இயக்கப்படாததால், மூன்று நாள்களாக விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உடனடியாக உதவிகளை அளிக்கவும் இந்திய தூதர்களைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் சிக்கியுள்ளோருக்கு இலங்கை அரசு சார்பில் ஒரு வேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள தமிழர்களின் செல்போன்கள் அனைத்தும் சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. உடனடியாக அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று நாசர் உறுதி அளித்துள்ளார்.
Minister Nasser confirmed that steps are being taken to rescue Tamils stranded at the Sri Lankan airport.
இதையும் படிக்க.. கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது