இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து வரும் டிசம்பா் மாதம் முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
இது குறித்து பாகிஸ்தானுக்கான வங்கதேச தூதா் இக்பால் ஹுசைன் கான் புதன்கிழமை கூறியதாவது:
டிசம்பா் மாதம் முதல் டாக்கா-கராச்சி இடையே நேரடி விமானங்கள் இயங்கும். மகான் ஏா் நிறுவனம் இந்த நகரங்கள் இடையே வாரத்துக்கு மூன்று விமானங்களை இயக்கும். ஃப்ளை ஜின்னா, ஏா்சியால் ஆகிய இரு பாகிஸ்தான் தனியாா் விமான நிறுவனங்களும் இதற்காக வங்கதேச வான்வழி போக்குவரத்து துறையிடமிருந்து அனுமதி பெற்றுள்ளன.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை பெரிதும் வலுப்படுத்தும். கடந்த டிசம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டுள்ள நேரடி சரக்குப் போக்குவரத்து சேவைக்கு இது பெரும் உதவியாக இருக்கும். பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான வா்த்தகம் அதிகரித்துள்ளதால், நேரடி சரக்குப் கப்பல் போக்குவரத்தும் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.
மாணவா் போராட்டங்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகிய பிறகு அமைந்த முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பாகிஸ்தானுடன் உறவுகளை மேம்படுத்திவருகிறது. இதன் விளைவாக நுழைவு இசைவு (விசா) வழங்குவதில் எளிமை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் - அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப் படை அதிகாரி கைது!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


