அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஈரான் தாக்குதல் எதிரொலி: வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து!

ஈரான் தாக்குதல் எதிரொலியால் வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்.

Updated On :24 ஜூன் 2025, 2:36 am

ஈரான் தாக்குதல் எதிரொலியால் வளைகுடா நாடுகளுக்கு 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், ஈரானின் மூன்று அணு ஆயுத தளவாடங்கள் மீது பஸ்டர் பங்கர் குண்டுகளைப் போட்டு அமெரிக்கா அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, திங்கள்கிழமை இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் அதிரடியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே எந்த போர் நிறுத்தமும் இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இதனால், இந்தப் போர் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல்- ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், லெபனான், இராக், கத்தார், குவைத், சௌதி அரேபியா, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.

இதனால், தோஹா, அபுதாபி, குவைத், துபாய் நாடுகளுக்கு செல்லும் 6 விமானங்களும், அங்கிருந்து சென்னை வரும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாய்லாந்திலிருந்து கத்தார் தலைநகர் தோஹா சென்ற 3 கத்தார் ஏர்லைன்ஸ் விமானங்கள் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.

இந்தியாவில் இன்று லண்டன், பஹ்ரைன், அபுதாபி செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.