வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இந்தியா, சீனாவுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு

ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 % வரி விதிக்கும் மசோதாவைப் பற்றி....

News image

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி.

Updated On :2 ஜூலை 2025, 3:03 am

ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது.

ரஷியாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா முன்மொழியப்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்தியா, சீனாவுடன் மிகச் சிறந்த வர்த்தகம் நடைபெறப் போகிறது என அமெரிக்கா கூறிவந்தது. இப்போது அந்த இரு நாடுகள் மீதும் 500 சதவிகிதம் வரை வரி விதிக்க புதிய மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளது. இது இருநாடுகளுக்கும் பேரிடியாக வந்திறங்கியுள்ளது.

ரஷியாவை பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்க இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தள்ளுபடி விலையில் ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை அதிகளவில் வாங்கக்கூடிய இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அதிகளவில் பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இதுகுறித்து கிரஹாம் கூறுகையில், “ரஷியாவிடமிருந்து பொருள்களை வாங்கிக் கொண்டு, உக்ரைனுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், இந்த வரிவிதிப்பை எதிர்கொள்ளக்கூடும். இந்தியாவும், சீனாவும் ரஷிய அதிபர் புதினிடமிருந்து 70 சதவிகிதம் அளவுக்கு கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன” என்றார்.

ஒருவேளை கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் மற்றும் 500 சதவிகித வரி விதிப்பு ஆகியவை இந்தியாவில் மருந்துகள், ஜவுளி, ஐடி சேவைகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரஷியாவிலிருந்து அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துவந்த இந்தியா, சமீபத்திய ஆண்டுகளாக ரஷியாவிடமிருந்து கிட்டத்தட்ட 49 பில்லியன் யூரோ வரை கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்துள்ளது.

குடியரசுக் கட்சியின் எம்பி கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் எம்பி ரிச்சர்ட் புளூமெண்ட் ஆகியோரால் முன்மொழியப்பட்டு வழங்கப்பட்ட இந்த மசோதாவுக்கு 84 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா ஒருவேளை சட்டமாக மாறினால், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கக் கூடும். மேலும், இது மற்றொரு வர்த்தகப் போருக்கான துவக்கமாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

Summary

A proposed US Senate bill, backed by President Donald Trump, could impose 500% tariffs on countries, including India and China, that continue trading with Russia, Republican Senator Lindsey Graham said in an interview.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.