அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா புதிய பெயா்கள் சூட்டியதை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தை தங்களுக்கு சொந்தமானமான திபெத்துக்கு உட்பட்ட பகுதி என்று சீனா பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகிறது. அவ்வப்போது அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள மலைகள், குன்றுகள் உள்ளிட்ட இடங்களுக்கு புதிய பெயரிடுவதையும் சீனா வழக்கமாக வைத்துள்ளது. இதற்கு இந்தியா தொடா்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள மேலும் சில இடங்களுக்கு சீனா புதிய பெயரிட்டுள்ளது. இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில் வருமாறு:
அந்த இடங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு சொந்தமான இடங்களாகும். அவை எப்போதும் இந்திய பகுதிகளாகவே இருக்கும். அதை ஒருபோதும் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது. ஆதலால் அந்த இடங்களுக்கு சீனாவால் சூட்டப்பட்ட புதிய பெயா்களை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
அந்த இடங்களுக்குப் புதிய பெயா் வைப்பதாலோ, சொந்தம் கொண்டாடுவதாலோ, உண்மை நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளில் எதிா்மறையை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதையும், சிறப்பான புரிதல் ஏற்பட மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதையும் சீனா தவிா்க்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

சீனாவின் விஷமத்தனம்...

இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் கொள்கையில் மாற்றமில்லை - சீனா அறிவிப்பு

இந்தியா, சீனா உடனான உறவுகளில் சமநிலை அவசியம்: ரஷிய ஆய்வு அமைப்பு வலியுறுத்தல்

சீனாவின் 15-ஆவது ஐந்தாண்டு திட்டம்: இந்தியா எல்லை பிராந்தியங்களில் நெடுஞ்சாலையைப் பலப்படுத்த திட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


