பிரதமர் நரேந்திர மோடி, கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் மிகக் குறுகிய நாள்களில், அதிக நாடுகளுக்கு அவர் மேற்கொள்வுள்ள சுற்றுப்பயணமாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.
8 நாள்கள் கொண்ட இந்தச் சுற்றுப்பயணம் ஆப்பிரிக்க நாடான கானாவில் இன்று (ஜூலை 2) தொடங்குகிறது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
பிரதமராகப் பதவியேற்றப் பிறகு மோடியின் முதல் கானா பயணம் இதுவாகும். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் கானாவுக்குச் சென்றதில்லை.
கானா தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்ற கானா அதிபர் ஜான் டிராமணி மஹாமாவை மோடி சந்திக்கவுள்ளார். பின்னர் ஜூலை 3 ஆம் தேதி டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்குச் செல்வார். டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசரின் அழைப்பின் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார்.
ஜூலை 4 ஆம் தேதி பிரதமர் மோடி ஆர்ஜென்டீனாவுக்குச் செல்கிறார். அதிபர் ஜேவியர் மிலேயின் அழைப்பின் பேரில் மோடி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமரின் முதல்பயணம் இதுவாகும்.
உணவு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், மருத்துவம், சுரங்கம், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் மோடியும் மிலேயும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள்.
ஜூலை 6 ஆம் தேதி பிரேசிலுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி. ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இது மோடியின் நான்காவது பிரேசில் பயணமாகும்.
ஜூலை 9 ஆம் தேதி நமீபியாவுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, நமீபிய அதிபர் டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்திக்கிறார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் நமீபியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், ஒரு இந்தியப் பிரதமர் அந்த நாட்டிற்கு வருகை தருவது 3-வது முறையாகும்.
Summary
Prime Minister Narendra Modi has left today for his visit to Ghana, Trinidad and Tobago, Argentina, Brazil, and Namibia. Mr Modi will arrive in Ghana today on a two-day visit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி ட்வீட்

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


