இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்தோ - பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளில், அமெரிக்காவுக்கு மிகவும் முக்கிய நட்பு நாடுகளில் இந்தியா முக்கியமான நாடு என்பதை வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. இது புதுதில்லி - வாஷிங்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்துக்கு துவக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கடந்த 27 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நாங்கள் எல்லோருடனும் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யப் போவதில்லை. ஆனால், நாங்கள் சில நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்கிறோம்.
ஒருவேளை இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தகம் மேற்கொள்ளப்படலாம்” எனத் தெரிவித்திருந்தார். அதைத் தற்போது வெள்ளை மாளிகை உறுதிசெய்துள்ளது.
குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கருத்துகள் வெளியாகியிருக்கின்றன.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், “அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மிகவும் அருகில் உள்ளதாகவும், இறுதி அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.
ஆசிய பசிபிக் பகுதியில் இந்தியா நட்பு நாடாக உள்ளது. மேலும் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப்புக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது. அவர் அந்த உறவை தொடர்ந்து கொண்டிருப்பார்” என்று கூறினார்.
Summary
Very strategic ally: White House says India-US trade deal announcement soon
Speaking at a press conference in the White House, Karoline Leavitt said the US-India trade deal is very close and final announcements will come soon.
இதையும் படிக்க... தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலி 34 ஆக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!

வெள்ளை மாளிகை அருகே பூங்காவில் துப்பாக்கிச்சூடு?அமெரிக்க உளவுத் துறை விசாரணை!

அமெரிக்க படையில் ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார்! - ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கை!
டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல! ஈரானுக்கு வெள்ளை மாளிகை இறுதி எச்சரிக்கை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


