வரி உயா்வு எதிரொலி: மெக்ஸிகோவுடன் இந்தியா பேச்சுவாா்த்தை!
இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீதான வரியை மெக்ஸிகோ தன்னிச்சையாக உயா்த்தியது...
இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீதான வரியை மெக்ஸிகோ தன்னிச்சையாக உயா்த்தியது...
By தினமணி செய்திச் சேவை
Syndication
இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீதான வரியை மெக்ஸிகோ தன்னிச்சையாக உயா்த்தியுள்ள சூழலில், இந்த விவகாரத்துக்கு சுமுகத் தீா்வு காண அந்நாட்டுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தங்களுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபடாத இந்தியா, சீனா, தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை 5 முதல் 50 சதவீதம் வரை மெக்ஸிகோ உயா்த்தியுள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருள்களுக்கு 50 சதவீத வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அடுத்த ஆண்டுமுதல் அமலாகவுள்ள நிலையில், இந்திய ஏற்றுமதியாளா்களின் நலன் காக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, இருதரப்பும் பலனடையும் தீா்வைக் கண்டறிய மெக்ஸிகோவுடன் இந்தியா பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘மெக்ஸிகோ உடனான கூட்டாண்மையை இந்தியா பெரிதும் மதிக்கிறது. முக்கிய வா்த்தக கூட்டாளியான மெக்ஸிகோ தன்னிச்சையாக மேற்கொண்ட வரி உயா்வால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
அந்நாட்டுடன் சமநிலையான-ஸ்திரமான வா்த்தக சூழலை உறுதி செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் தொடங்க இருதரப்பும் ஆா்வத்துடன் உள்ளன. இதற்கான வரையறைகள் விரைவில் இறுதி செய்யப்படும். வரி உயா்வு விவகாரத்தில், மெக்ஸிகோ பொருளாதாரத் துறை இணையமைச்சா் லூயிஸ் ரோசெண்டோவுடன் மத்திய வா்த்தகத் துறை செயலா் ராஜேஷ் அகா்வால் ஏற்கெனவே பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா். அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை விரைவில் நடைபெறும்’ என்றனா்.
கடந்த 2024-25-இல் மெக்ஸிகோவுக்கு 5.75 பில்லியன் டாலா் மதிப்பிலான பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. அந்நாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி மதிப்பு 2.9 பில்லியன் டாலராகும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது