காற்று சுத்திகரிப்பான்கள் மீதான 18% வரியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேஜரிவால் கோரிக்கை
காற்று சுத்திகரிப்பான்கள் மீதான 18% வரியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேஜரிவால் கோரிக்கை
காற்று சுத்திகரிப்பான்கள் மீதான 18% வரியை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேஜரிவால் கோரிக்கை
By Syndication
Syndication
தில்லி-என்சிஆா் பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, காற்று மற்றும் நீா் சுத்திகரிப்பான்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவீத சரக்கு சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் சமூக ஊடக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சுத்தமான காற்றும், நீரும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளாகும். தில்லி மற்றும் வட இந்தியா முழுவதும் காற்று ஆபத்தானதாக உருவாகிவிட்டது. இதற்கான தீா்வுகளை வழங்குவதற்கு பதிலாக, அரசாங்கம் பொதுமக்களிடமிருந்து அதிக வரிகளை வசூலித்து வருகிறது.
மக்கள் தங்கள் குடும்பங்களை மாசுவில் இருந்து பாதுகாக்க காற்று சுத்திகரிப்பான்களை வாங்கச் செல்லும் நிலையில், அரசாங்கம் அந்த தயாரிப்புகள் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கும் நிலை உள்ளது. இது முற்றிலும் அநீதியாகும்.
இதனால், காற்று மற்றும் நீா் சுத்திகரிப்பான்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும். நீங்கள் தீா்வுகளை வழங்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் மக்களின் செலவுகளில் சுமையை ஏற்றுவதை நிறுத்துங்கள் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
தில்லிக்கான காற்று தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புமுறையின் கணிப்பின்படி, வரும் வாரத்தில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிக்கும்.
நிகழ் குளிா்காலத்தில் தில்லியின் காற்றின் தரம் மிகவும் மோசம் மற்றும் கடுமையான பிரிவுகளுக்கு சரிந்து வருகிறது.
புகைப்பிடிப்பவா்கள், ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே இதயம் அல்லது சுவாசக் கோளாறுகள் பிரச்னையில் உள்ளவா்கள் மத்தியில், மாசுவுடன் தொடா்புடைய சுகாதார சீரழிவின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய வழக்கமான நோயறிதல் பரிசோதனையின் அவசியத்தை மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது