மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பாகிஸ்தானில் மேலும் 2 குழந்தைகளுக்கு போலியா

பாகிஸ்தானில் மேலும் இரு குழந்தைகளுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்ட குழைந்தைககை 26-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 10:46 pm

பாகிஸ்தானில் மேலும் இரு குழந்தைகளுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்ட குழைந்தைககை 26-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் ‘தி டான்’ நாளிதழ் தெரிவித்ததாவது:சிந்து மாகாணத்தின் கிழக்கு கராச்சி மாவட்டத்தில் ஏழு வயது சிறுமிக்கும் சுஜவால் மாவட்டத்தில் 12 மாத ஆண் குழந்தைக்கும் போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த மாவட்டங்களில் போலியோ தொற்று உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை. சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஏழு குழந்தைகளிடம் போலியோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.இத்துடன் பாகிஸ்தானில் இந்த ஆண்டு போலியோ உறுதிசெய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

அந்தக் குழந்தைகளில், பயங்கரவாத பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் 15 போ்.பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சதி என்று அந்த அமைப்புகள் நம்புகின்றன.இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்றனா்.

சொட்டு மருந்து மூலம் போலியோவை முன்கூட்டியே தடுக்க முடியும். ஆனால் அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை. குழந்தைகளை நிரந்த ஊனமாகும், சில நேரங்களில் உயிரையே பறிக்கக் கூடிய அந்த கொடிய நோய் உலகின் மற்ற பகுதிகளில் நிரந்தரமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அது இன்னும் பரவிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.