நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சட்டத்திருத்த மசோதாவை கிழித்து கடும் எதிர்ப்பு! நாடாளுமன்றத்தை அதிரவைத்த எம்பி!

மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து இளம் எம்பி முழக்கம் எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image
ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க்
Updated On :15 நவம்பர் 2024, 7:28 am

DIN

நியூசிலாந்தில் மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து இளம் எம்பி முழக்கம் எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின மவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதாவின் நகலை கிழித்து இளம் எம்பி 22 வயதான ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்து பாரம்பரிய ஹக்கா முழக்கத்தை எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹக்கா முழக்கத்தில் ஈடுபட்டதுடன் மற்ற உறுப்பினர்களும் அவருடன் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினர். இதனால், அவைத் தலைவர் ஜெர்ரி பிரவுன்லி அமர்வை தற்காலிகமாக நிறுத்தி ஒத்திவைத்தார்.

YouTube video thumbnail

1840 ஆம் ஆண்டு அரசுக்கும், மவோரி பழங்குடியின மக்களுக்கும் இடையே போடப்பட்ட வைடாங்கி ஒப்பந்தத்தின்படி, அவர்கள் பயன்படுத்திய நிலங்களை தாங்களே வைத்துகொள்ளலாம் என்றும், ஆங்கிலேயே அரசுக்கு ஒப்படைக்காமல் தங்கள் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பழங்குடி மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்திருத்தம் நியூசிலாந்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் மற்றும் அவரது தந்தை இருவரும் தே பதி மவோரி தொகுதியில் போட்டியிட்டனர். ஆனால், இளம் வேட்பாளர் என்ற முறையில் ஹனா ராவ்ஹ்தி கரேரிக்கி மைபி கிளார்க் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மவோரி மக்களின் உரிமைகளைப் பறிப்பதாக ஹனா ராவ்ஹ்தி பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனின் பழமைவாத ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

இந்தச் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு குறைவான ஆதரவு இருப்பதால் ஒரு சட்டமாக மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.