பாகிஸ்தானில் மொஹரம் பண்டிகையையொட்டி சமூக ஊடகங்களைத் தடைசெய்ய கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி முதல் சமூக ஊடகமான எக்ஸ் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, மொஹரம் பண்டிகையையொட்டி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஜூலை 13 முதல் 18 வரையிலான ஆறு நாள்களுக்கு தடை விதிக்கக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸ் தலைமையிலான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரவைக் குழு யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களையும் தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.
120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பஞ்சாப் மாகாணத்தில் வகுப்புவாத வன்முறையைத் தவிர்ப்பதற்காகவும், வெறுக்கத்தக்க மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தவும் பஞ்சாப் அரசு நேற்று (ஜூலை 04) பாகிஸ்தானின் மத்திய அரசை வற்புறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகிய இருவரும் சமூக ஊடகத் தளங்களுக்கு முற்றிலுமாக நிரந்தரத் தடை விதிக்கவேண்டும் என்று கோரி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும்! - பிரதமருக்கு பஞ்சாப் காங்கிரஸ் வலியுறுத்தல்!

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

மகளிருக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை: பஞ்சாப் அரசு அறிவிக்கை வெளியீடு

ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



