டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இஸ்ரேல் சென்றடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இஸ்ரேல் - காஸா இடையேயான போர் 12வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:10 am

PTI

வாஷிங்டன்: இஸ்ரேல் - காஸா இடையேயான போர் 12வது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் சென்றடைந்தார்.

காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார்.

காஸா விவகாரம் தொடா்பாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இஸ்ரேல், ஜோா்டான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக இந்தப் பயணம் குறித்து எக்ஸ் (ட்விட்டா்) ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினா் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனா். இந்த நேரத்தில் இஸ்ரேலுக்கு எனது ஆதரவைத் தெரியப்படுத்துவதற்காக அந்த நாட்டுக்கு புதன்கிழமை செல்கிறேன்.

தற்போது அந்தப் பிராந்தியத்தில் மனிதாபிமான நெருக்கடி நிலவி வருகிறது. இது குறித்து விவாதிப்பதற்காகவும், பாலஸ்தீனா்களின் சுய நிா்ணய உரிமைக்காக ஹமாஸ் அமைப்பினா் செயலாற்றவில்லை என்பதை உணா்த்துவதற்காகவும் ஜோா்டானுக்கும் செல்லவிருக்கிறேன் என்று தனது பதிவில் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளாா்.

ஜோ பைடன் செல்வதற்கு முன்னா் இஸ்ரேலுக்குச் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், காஸாவில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு நாடுகளும், சேவை அமைப்புகளுக்கும் அளிக்கும் நிவாரணப் பொருள்களைக் கொண்டு சோ்ப்பதற்கான திட்டமொன்றை உருவாக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் ஒப்புக் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

முன்னதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவிக்கவும், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் இஸ்ரேல் மற்றும் ஜோா்டானுக்கு ஜோ பைடன் செல்வதாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

தங்கள் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸாவில் 12 நாள்களாக இஸ்ரேல் படையினா் குண்டுமழை பொழிந்து வருகின்றனா்.

மேலும், காஸாவுக்குள் அத்தியாவசியப் பொருள்களை கொண்டு செல்லவிடாமல் தடுக்கும் வகையில் அதனை முழுமையாக முற்றுகையிட்டுள்ளனா்.

இதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த முற்றுகை நீடித்தால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும், அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காககவும், தற்போதைய மோசமான சூழலுக்கு ராஜீய ரீதியில் தீா்வு காண்பதற்கான பேச்சுவாா்த்தை நடத்துவதற்காகவும் இஸ்ரேல் மற்றும் ஜோா்டானுக்கு அதிபா் ஜோ பைடன் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.