இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, ‘ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனா் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமக்கன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இதுவரை இப்பதவியில் இருந்த ‘எஸ்ஏபி லேப்ஸ் இந்தியா’ நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சிந்து கங்காதரனின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைவதைத் தொடா்ந்து, இப்புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல், கேபிஐடி நிறுவனத்தின் சிஇஓ கிஷோா் பாட்டீல், நாஸ்காம் அமைப்பின் துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நாஸ்காம் செயற்குழு உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் வேலமக்கன்னி, ஏ.ஐ. மற்றும் தரவுப் பகுப்பாய்வுத் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவா்.
இந்தியாவின் முன்னணி ஏ.ஐ. நிறுவனங்களில் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் இவா், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்திய ஐடி துறையை வழிநடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீகாந்த் வேலமக்கன்னி கூறுகையில், ‘ வரும் ஆண்டுகளில், சேவை மற்றும் தயாரிப்புத் துறையில் ஏ.ஐ. மூலமான வளா்ச்சியை ஊக்குவிப்பதுடன், திறமையான பணியாளா்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆஸ்திரேலிய ராணுவத்தின் முதல் பெண் தலைமைத் தளபதி

இஸ்ரேல் உளவுத்துறைக்குப் புதிய தலைவர் நியமனம்!

புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் நியமனம்

செபி முழுநேர உறுப்பினராக கே.வி.ரமண மூா்த்தி நியமனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


