மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நிகராகுவா பெண்!

எல் சால்வடாரில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் நிகராகுவாவைச் சேர்ந்த பெண் ஷென்னிஸ் பலாசியஸ் வெற்றிபெற்றார்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:22 am

DIN

நிகராகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார்.

எல் சால்வடார் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்ஃபோ அரங்கில் இன்று (நவம்பர் 19) நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் நிகராகுவா நாட்டைச் சேர்ந்த பெண் ஷென்னிஸ் பலாசியஸ் வெற்றி பெற்றார்.

ஷென்னிஸ் பலாசியஸ்-க்கு 2022 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற அமெரிக்காவின் கேப்ரியல் முடிசூட்டினார்.

72வது பிரபஞ்ச அழகி போட்டி எல் சால்வடாரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஸ்வேதா ஷர்தா உள்ளிட்ட சுமார் 90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

சான் சால்வடாரில் நடைபெற்று வந்த இப்போட்டியில் நிகராகுவா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் இறுதி மூன்று இடங்களுக்குள் நுழைந்தனர். 

முன்னதாக, இந்தியப் போட்டியாளர் ஸ்வேதா ஷர்தா அரையிறுதிக்குத் தகுதிபெற்று முதல் 20 இடங்களுக்குள் இடம்பிடித்தார். இருப்பினும், நீச்சலுடை சுற்றுக்குப் பிறகு அவரால் முதல் 10 இடங்களுக்குள் நுழைய முடியவில்லை.

குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்த மிஷேல் கான் மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த மரியா கமிலா ஆகியோர் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்ற முதல் திருமணமான பெண்கள் ஆவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.