ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பலிகளை மறைக்க மருத்துவர்களைக் கட்டாயப்படுத்தும் சீனா: தகவல்

கரோனா தொடர்பான பலிகளை மறைக்குமாறு மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக, எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

News image

பலிகளை மறைக்க மருத்துவர்களைக் கட்டாயப்படுத்தும் சீனா: தகவல்

Updated On :28 ஜனவரி 2023, 12:18 pm

பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கையை குறைவாகக் காட்ட, கரோனா தொடர்பான பலிகளை மறைக்குமாறு மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக, எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கேற்ப, சுகாதார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளையும் சீன அரசு மாற்றியமைத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்ல, கரோனாவால் மருத்துவமனைக்கு வெளியே பலியாகும் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்வதையே சீனா நிறுத்திவிட்டதாகவும் அந்த தகவல் மேற்கோள்கோட்டியுள்ளது.

வெளி உலக அழுத்தம் காரணமாக, சீனா, கடந்த டிசம்பர் மாதம் கரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் வரை பலியானதாகத் தகவல் கொடுத்தது. ஆனால், அதற்கு முன்பு வரை கரோனா பேரிடர் தொடங்கியதிலிருந்து வெறும் ஐந்து ஆயிரத்திலேயே தக்க வைத்துக் கொண்டிருந்தது.

ஆனாலும், சீனா தற்போது தெரிவிக்கும் எண்ணிக்கையை விடவும், கரோனா பலி எண்ணிக்கை கடுமையாக அதிகமாக இருக்கும் என்றே அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.