புவி நாளையொட்டி காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம், முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று புவி நாளையொட்டி, காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க, தனிநபர்களும் சமூகங்களும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை எடுத்துக்காட்டும் விவாதத்தில் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
சித்திரத்தில், வீட்டில் உலர்த்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக காற்றில் துணிகளை உலர்த்துவது, மரங்களை நடுவது, சோலாரைப் பயன்படுத்தி மின்சாரம், உணவுத் தாவரங்களை வளர்த்தல், தாவர உணவுகளை சாப்பிடுவது, பெட்ரோல் வாகனத்திற்குப் பதிலாக சைக்கிள் ஓட்டுவது என காலநிலை மாற்றத்தை சரிசெய்யும் வழிகளை கூறியுள்ளது கூகுள்.
சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி புவி நாள் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்
கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

