இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லமாட்டோம் என மகிந்த ராஜபட்சவின் இளைய மகன் நமல் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுடைய போராட்டத்தின் காரணமாக எழுந்த நெருக்கடியால் பிரதமர் பதவியை மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்தார்.
அவருடைய வீட்டிற்கு நேற்று தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து காவலர்கள் உதவியுடன் தப்பித்த ராஜபட்ச, தனது குடும்பத்துடன் வெளிநாடு தப்பித்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன.
அதனைத் தொடர்ந்து திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமில் தனி ஹெலிகாப்டர் மூலம் மகிந்த ராஜபட்ச குடும்பத்துடன் தப்பிக்கும் காட்சிகள் வெளியாகின.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடற்படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள நமல் ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச இலங்கையிலிருந்து தப்பிச்செல்லவில்லை. நாங்கள் வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லவும் மாட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளார். அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் குடியிருந்த வீட்டை எரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் யோஷித ராஜபக்ச ஏற்கெனவே வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

