ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இந்தியா வரவிருந்த நிலையில் இஸ்ரேல் பிரதமருக்கு கரோனா

இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னடுக்கு (50) திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

News image

இந்தியா வரவிருந்த நிலையில் இஸ்ரேல் பிரதமருக்கு கரோனா

Updated On :28 மார்ச் 2022, 6:13 am

இஸ்ரேல் பிரதமர் நஃப்டாலி பென்னடுக்கு (50) திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா- இஸ்ரேல் இடையேயான 30 ஆண்டுகால ராஜீய ரீதியிலான உறவைக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவிருந்த நிலையில், இஸ்ரேல் பிரதமா் நஃப்டாலி பென்னடுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் நலமுடன் இருப்பதாகவும், வீட்டிலிருந்தே பணியாற்றுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அவரது இந்தியப் பயணம் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற அவா், அரசுமுறை பயணமாக முதல்முறையாக இந்தியா வருகைதரவிருந்தார்.

இஸ்ரேல் பிரதமா் ஏப்.2-ஆம் தேதி முதல் ஏப்.5-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.