மரியுபோல்: ரஷிய படைகளின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்கள், குடும்பத்தை இழந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்திருந்த திரையரங்கு மீது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தரைமட்டமாக்கியிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மரியுபோலில் உள்ள திரையரங்கு ஒன்றில், நூற்றுக்கணக்கானோர் தங்கியிருந்த நிலையில், அங்கு நடத்தப்பட்ட கோர தாக்குதலில் எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் படுகாயமடைந்தனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.
இதையும் படிக்க.. காலநிலை மாற்றம் நம்மை என்ன செய்யும் என்று கேட்பவர்களுக்கு..
மரியுபோல் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், இந்த திரையரங்கு மீது புதன்கிழமை ரஷிய படைகள் கோரத் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தி மேக்ஸர் செயற்கைக்கோள் திங்கள்கிழமை எடுத்த புகைப்படத்தில், இந்த திரையரங்கு கட்டடத்தின் முன்னும் பின்னும், மிகப்பெரிய வெள்ளை எழுத்துக்களால் ரஷிய மொழியில் குழந்தைகள் என்று எழுதப்பட்டிருந்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
உக்ரைனின் மரியுபோல் நகரம்தான், மற்றப் பகுதிகளை விட ரஷிய படையெடுப்பால் உருகுலைந்து போயிருப்பதாகவும், ஏவுகணை மற்றும் குண்டு வீச்சுகளால் இதுவரை 2,300 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள், மூன்று வாரங்களுக்கும் மேலாக நடந்து வரும் போரினால், ஒரு பக்கம் உயிராபத்துடன், குடிநீர், உணவு மருத்துவ வசதி பெற கடுமையான போராடி வருகிறார்கள்.
ஆனால், இந்தத் தாக்குதலை ரஷிய படைகள் நடத்தவில்லை என்றும், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நிதித் துறையில் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்: விழிப்புடன் இருக்க நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பு: நேபாள புதிய அரசுடன் இந்தியா ஆலோசனை

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள்: தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு

பைக்கில் தவறி விழுந்து தாய் உயிரிழப்பு: மகன் பலத்த காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


