சிங்கப்பூரில் புகலிடம் கோராத கோத்தபய: காரணம் என்ன?
கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றடைந்ததாகவும், ஆனால், அங்கு அவர் புகலிடம் கோரவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.


இலங்கை அதிபா் பதவியை கோத்தபய ராஜபட்ச வியாழக்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், அவர் மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றடைந்ததாகவும், ஆனால், அங்கு அவர் புகலிடம் கோரவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத் துறை கூறியிருப்பதாவது, தனிப்பட்ட முறையில் அவர் சிங்கப்பூருக்குள் நுழைய அனமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் தரப்பிலிருந்து அரசியல் தஞ்சம் அல்லது புகலிடம் கோரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவர் சௌதி அரேபியாவுக்குத் தப்பிச் செல்ல முடிவு செய்திருப்பதாக வந்த ஊகங்கள் மூலம், அவர் விரைவில் சிங்கப்பூரிலிருந்து சௌதி அரேபியா செல்லலாம் என்று தெரிகிறது.
சில நாள்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபட்ச, அங்கிருந்து விமானம் மூலம் சிங்கப்பூா் சென்றாா். அவா் தனிப்பட்ட முறையில் வந்திருப்பதாகவும், புகலிடம் எதுவும் அளிக்கவில்லை எனவும் சிங்கப்பூா் அரசு தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, அதிபா் பதவியில் இருந்து ஜூலை 13-ஆம் தேதி விலக உள்ளதாக கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்தாா். ஆனால், பதவியை ராஜிநாமா செய்வது தொடா்பாக எதுவும் தெரிவிக்காத அவா், விமானப் படை விமானம் மூலம் மனைவியுடன் மாலத்தீவுக்கு புதன்கிழமை தப்பிச் சென்றாா். அங்கிருந்து, நாட்டின் இடைக்கால அதிபராக பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை அவா் நியமித்தாா்.
அதிபராக இருக்கும்போது அவரைக் கைது செய்ய முடியாது என்பதால், அப்பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பே வெளிநாட்டுக்கு அவா் தப்பியதாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூருக்கு... மாலத்தீவிலிருந்து விமானம் மூலம் கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூருக்கு வியாழக்கிழமை சென்றாா். சவூதி ஏா்லைன்ஸின் எஸ்வி788 விமானம் மூலம் அவா் சிங்கப்பூா் சாங்கி சா்வதேச விமான நிலையத்தை உள்ளூா் நேரப்படி இரவு 7 மணிக்கு சென்றடைந்தாா்.
இதுதொடா்பாக ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச தனிப்பட்ட முறையில் சிங்கப்பூா் வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் புகலிடம் எதுவும் கோரவில்லை; அவருக்கு புகலிடமும் அளிக்கப்படவில்லை என்றாா்.
கோத்தபய ராஜபட்ச தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்து நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தனவுக்கு வியாழக்கிழமை மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினாா். இந்த ராஜிநாமா ஏற்கப்படுவதாக நாடாளுமன்ற அவைத் தலைவா் இன்று உறுதி செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...