கொழும்பு: இலங்கையின் பொருளாதார நிலையை சீர் செய்யாததால், அதிபர் பதவியிலிருந்து விலகக் கோரி, அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் கோத்தபய ராஜபட்ச தப்பியோடினார்.
இலங்கை அதிபர் மாளிகையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை எல்லாம் தள்ளிவிட்டு, மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, அதிபர் கோத்தபய ராஜபட்சவை ராணுவத்தினர் பாதுகாப்பாக அதிபர் மாளிகையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபட்ச, ராணுவ தலைமையகத்தில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. வெளிநாடு தப்பிச்செல்கிறாரா இலங்கை அதிபர்? வெளியான விடியோ
அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய நிலையிலும், போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்துள்ளனர். இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் கிளர்ச்சி எழுந்துள்ளது.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை வாயிலில் குவிந்துள்ளனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்தபோராட்டக்காரர்கள், அங்கிருந்த ஏராளமான சொகுசுக் கார்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடிய கோத்தபய ராஜபட்ச, வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பல் ஒன்றில், கோத்தபயவின் விலைஉயர்ந்த உடமைகள் ஏற்றப்படுவதாகவும் விடியோக்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: தமிழகத்தில் புதிதாக ஒரு ஸ்டாலினிசம்!
இலங்கையில் முதல் முறையாக, அதிபர் மாளிகையையும், அதிகாரப்பூர்வ அதிபர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை அதிபர் மாளிகையிலிருந்த அதிபர் கொடி இறக்கப்பட்டு, இலங்கை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இலங்கை நாடாளுமன்ற அவசர கூட்டத்துக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


