பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஒமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரோனா? உலக சுகாதார நிறுவனம் மறுப்பு

டெல்டாகிரோன் எனப்படும் புதிய வகை வைரஸை கண்டுபிடித்ததாக சைப்ரஸ் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு.

News image

ஒமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரோனா? உலக சுகாதார நிறுவனம் மறுப்பு

Updated On :10 ஜனவரி 2022, 12:14 pm


புது தில்லி: டெல்டாகிரோன் எனப்படும் புதிய வகை வைரஸை கண்டுபிடித்ததாக சைப்ரஸ் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில், அது உண்மையான வைரஸ் அல்ல என்று உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான நிபுணர் டாக்டர் கிருத்திகா குப்பள்ளி தெரிவித்துள்ளார்.

கோவிட் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினரான கிருத்திகா குப்பள்ளி தனது சுட்டுரைப் பக்கத்தில் இது பற்றி கூறியிருப்பதாவது, டெல்டாக்ரோன் என்பது உண்மையான வைரஸ் அல்ல, மற்றும் இது ஆய்வாகச் சோதனையின் போது உருவான கழிவுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இரண்டு தொற்றுகளின் பெயர்களை ஒன்றிணைத்து புதிய தொற்றுகளுக்குப் பெயர் வைக்க வேண்டாம், அவற்றை பிரபலமான நட்சத்திர தம்பதிகளுக்கே விட்டுவிடலாம் என்றும் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

ஒரு புதிய வகை தொற்றுக் கண்டறியப்பட்டு சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குப் பிறகுதான், அதன் உருமாறிய அடுத்த வகை வைரஸ் உருவாகும். ஆனால், ஒமைக்ரான் கண்டறியப்பட்டு ஒரு சில வாரங்களே ஆகியுள்ளன. எனவே, அதற்குள் உருமாறிய புதிய வகை வைரஸ் உருவாவதில் சந்தேகமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.