இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மக்கள் போராட்டம்: இலங்கையில் முழு ஊரடங்கு

இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

News image
மக்கள் போராட்டம்: இலங்கையில் முழு ஊரடங்கு
Updated On :1 பிப்ரவரி 2024, 8:51 am

DIN


இலங்கையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார பற்றாக்குறை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், நாளை மிகப்பெரிய அளவில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் கோத்தபய ராஜபட்சவை ஆட்சியிலிருந்து விலக வலியுறுத்தி, நாளை மிகப்பெரிய அளவில் மக்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து, இலங்கை முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இலங்கையில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பணியும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், நாளை முழு ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.