தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ரஷிய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் பலி(விடியோ)

ரஷியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.

News image
ரஷிய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு
Updated On :28 ஜனவரி 2024, 4:11 am

ANI

ரஷியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.

பெர்ம் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் வழக்கம்போல் இன்று காலை வகுப்புகள் நடைபெற்று வந்தன.

அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இதுவரை 8 மாணவர்கள் பலியாகியுள்ளனர். 6க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மேலும், சிலர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க வகுப்பறை ஜன்னல் வழியாக வெளியே குதித்ததில் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.