இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,865 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
கரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 339 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 98,974 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் கரோனா பாதிப்பில், அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தை பிடித்துள்ளது இத்தாலி.
இதற்கிடையில், மேலும் 13,488 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 2,453,706 பேர் குணமடைந்தனர். தற்போது வரை 4,23,807 லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் 20,157 கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் 2,475 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாலியில் 4.9 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


