பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இரண்டு விரைவு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 70 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பாகிஸ்தான் ராணுவமும், துணை ராணுவப் படையும் அழைக்கப்பட்டுள்ளது.
தெற்கு பாகிஸ்தானின் கோட்கி பகுதியில் கராச்சியிலிருந்து புறப்பட்ட மில்லட் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி பக்கத்தில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது, அங்கே ராவல்பிண்டியிலிருந்து வந்து கொண்டிருந்த சர் சையத் விரைவு ரயில், தடம்புரண்டிருந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 70 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிக்கு ராணுவமும், துணை ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கற்றுக்கொள்ள சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி! பாஜக தலைவர் பேச்சு
உளவியல் ஆய்வில் 16 உண்மைகள்
மரக்கன்று நடுவோம்...

ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கை கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


