பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இலங்கையில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடக்கம்: ஆனால்..

இலங்கையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று சர்வதேச விமானப் போக்குவரத்துத் தொடங்கப்பட்டுள்ளது.

News image

இலங்கையில் சர்வதேச விமானப் போக்குவரத்துத் தொடக்கம்: ஆனால்..

Updated On :1 ஜூன் 2021, 7:49 am


கொழும்பு: இலங்கையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று சர்வதேச விமானப் போக்குவரத்துத் தொடங்கப்பட்டுள்ளது.

கத்தாரிலிருந்து 53 பயணிகளுடன் முதல் விமானம் இலங்கையில் தரையிறங்கியது.

ஆனால் அதே வேளையில், கடந்த 14 நாள்களில் இந்தியா மற்றும் வியட்நாம் சென்று வந்தவர்கள் யாரும் கொழும்பு விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியச் சேவைகளுக்கு மட்டும் இயக்கப்பட்டு வரும் உள்நாட்டு விமான சேவையிக்கான கட்டுப்பாடுகள் ஜூன் 7 முதல் தளர்த்தப்படுகிறது.

நள்ளிரவு முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஒரு விமானத்தில் 75 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வெளிநாட்டினரோ, இலங்கையைச் சேர்ந்தவர்களோ, கடந்த 14 நாள்களில் இந்தியா அல்லது வியட்நாமில் தங்கியிருந்தாலோ, தங்களது விமானப் பயணத்துக்காக இந்நாடுகளில் தரையிறங்கியவர்களாக இருந்தாலோ அவர்கள் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் விமானப் போக்குவரத்து அதிகாரி ஜெயகாந்தா அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.