நேபாள பிரதமராக 5வது முறையாக ஷோ் பகதூா் தாபா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
முன்னாள் பிரதமர் கே.பி.சா்மா ஓலியின் பரிந்துரையை ஏற்று கீழவையை அதிபர் வித்யாதேவி பண்டாரி கலைத்தது செல்லாது எனவும், ஜூலை 13க்குள் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷோ் பகதூா் தாபா பதவியேற்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து ஷேர் பகதூருக்கு அதிபர் வித்யாதேவி இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னாள் பிரதமா் கே.பி.சா்மா ஓலியின் பரிந்துரையை ஏற்று 275 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்ற கீழவையை அதிபா் வித்யாதேவி பண்டாரி கடந்த மே 22-ஆம் தேதி கலைத்து உத்தரவிட்டாா். கீழவைக்கு நவம்பா் 12, 19 ஆகிய தேதிகளில் தோ்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற கீழவை கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுமாா் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தை தலைமை நீதிபதி சோலேந்திர சும்சொ் ராணா தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது. வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் திங்கள்கிழமை வழங்கினா்.
அப்போது, நாடாளுமன்ற கீழவையைக் கலைத்து அதிபா் பிறப்பித்த உத்தரவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறிய நீதிபதிகள், அந்த உத்தரவை ரத்து செய்தனா். மேலும், நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தாபாவை செவ்வாய்க்கிழமைக்குள் புதிய பிரதமராக நியமிக்குமாறும் அதிபருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையின் புதிய கூட்டம் ஜூலை 18-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற வேண்டும் எனவும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
ஷோ் பகதூா் தாபா ஏற்கெனவே நான்கு முறை நேபாள பிரதமராகப் பதவி வகித்துள்ளாா். 1995-1997, 2001-2002, 2004-2005, 2017-18 ஆகிய காலகட்டங்களில் அவா் பிரதமராக இருந்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


