/

பிலிப்பின்ஸில் விமான விபத்து: பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு

பிலிப்பின்ஸில் விமானப் படை விமானம் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. 

News image

பிலிப்பின்ஸில் விமானப் படை விமானம் விபத்

Updated On :5 ஜூலை 2021, 8:06 am

பிலிப்பின்ஸில் விமானப் படை விமானம் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. 

தென் பிலிப்பின்ஸில் இருந்து 92 பேருடன் புறப்பட்ட சி-130 என்கிற விமானப்படை விமானம் சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்ற போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. விழுந்த வேகத்தில் விமானம் வெடித்துச் சிதறியது. 

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தற்போது இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விமானம் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.