கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!

அசாருதீன் அமைச்சராக நீடிப்பதில் சிக்கல் இல்லை! மாநில அரசு பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஒப்புதல்

News image

தெலங்கானா முதல்வருடன் அசாருதீன் - @azharflicks

Updated On :25 ஏப்ரல் 2026, 1:42 pm

ஹைதராபாத் : தெலங்கானாவில் மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் நிர்வாகியுமான முகமது அசாருதீன் மாநில அரசில் அமைச்சராக நீடிப்பதில் சிக்கல் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் சனிக்கிழமை(ஏப். 25) தெரிவித்தன.

கடந்த 2023-இல் நடைபெற்ற தெலங்கானா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட அசாருதீன் தோல்வியடைந்தார். இதையடுத்து, ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினா்கள் பிரிவின்கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தெலங்கானா மேலவைக்கு அசாருதீன் பெயரை மாநில அரசு பரிந்துரைத்தது. ஆனால், இந்தப் பரிந்துரையை ஏற்று அசாருதீனை மேலவை உறுப்பினராக ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா நியமிக்காமல் இருந்தார்.

இதனிடையே, மாநில அரசில் சிறுபான்மையினருக்கான நலத்துறை அமைச்சராக அசாருதீன் கடந்த அக்டோபரில் பதவியேற்றார். அதனையடுத்து 6 மாதங்களுக்குள் பேரவை அல்லது மேலவைக்கு உறுப்பினராக வேண்டும். அதற்கான கால அவகாசம் வரும் ஏப். 30-ஆம் தேதி முடிகிறது.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெலங்கானாவின் இப்போதைய ஆளுநர் சிவ பிரதாப் சுக்லாவைச் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்று ஆளுநரால் நியமனம் செய்யப்படும் உறுப்பினா்கள் பிரிவின்கீழ் தெலங்கானா மேலவைக்கு அசாருதீன் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர் எம். கோதண்டராம் ஆகியோரை நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக தெலங்கானா ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

Summary

In a relief to the Congress government in Telangana, Governor Shiv Pratap Shukla has approved the nomination of former cricketer Mohammad Azharuddin and retired professor M Kodandaram as MLCs under the Governor's quota, official sources said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.