/

நியூயார்க்கில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 3 வீரர்கள் பலி

நியூயார்க்கில் தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

News image

New York National Guard helicopter crash kills 3

Updated On :21 ஜனவரி 2021, 7:52 am

நியூயார்க்கில் தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

விபத்து தொடர்பாக அந்நாட்டு ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ கூறியதாவது, 

தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் மெண்டன் என்ற பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. 

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணத்தை நியூயார்க் தேசிய காவல்படை மற்றும் பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் விசாரித்து வருகின்றது. 

உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வீரர்கள் மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கும் வகையில் அரசு அலுவலக கட்டடங்களில் 50 சதவீத ஊழியர்களோடு தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.