துருக்கியின் கருங்கடல் மாகாணமான பார்ட்டின் கடற்கரையில் சரக்கு கப்பல் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷிய நாட்டுக் கொடியுடன் கப்பலில் 13 பேர் குழுவினருடன் சரக்குக் கப்பல் ஞாயிறன்று வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், துருக்கிய கடலோர காவல்படை தனது இணையதளத்தில் 12 ஊழியர்களைக் கொண்டிருப்பதாகவும், கப்பலில் பலாவ் கொடியுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹூரியட் தினசரி அந்தக் குழுவில் இரண்டு ரஷியர்களும் 10 உக்ரேனியர்களும் இருந்ததாக அறிவித்தனர்.
துருக்கிய போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் ஒரு டிவிட்டரில், அர்வின் என்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக இரண்டாக உடைந்து மிதந்ததாகக் கூறினார்.
இந்த கப்பல் ஜார்ஜியாவிலிருந்து பல்கேரியா செல்லும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவாக துருக்கிய கடற்படை போர்க் கப்பல் ஒன்றை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
தெலங்கானா மேலவை உறுப்பினர்களாக அசாருதீன், கோதண்டராமை நியமிக்க ஆளுநர் ஒப்புதல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


