ஆப்கன் தலைநகரம் காபூலில் வெவ்வேறு இடத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
கார்ட்-இ-பர்வானில் இன்று காலை 8.55 மணியளவில் காபூல் விமான நிலையத்தை இணைக்கும் நான்கு வழிச் சாலையில் வாகனத்துடன் இணைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.
இந்த குண்டு வெடிப்பில் வாகனத்திற்கு இருந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தனர்.
இதற்கு முந்தைய நாள் போலீஸ் மாவட்ட 2-இன் கார்ட்-இ-அரியானாவில் மற்றொரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்தொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.
செவ்வாய்க்கிழமை, தலைநகரில் கிராம மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஊழியர்கள் சென்ற வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நகர காவல்துறை மாவட்டம் 5இல் உள்ள பாக்-இ-தௌவுத் பகுதியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா

கன்னக்குழியா பாடல்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


