கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

15 மாதங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு விதிப்பு

கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நியூசிலாந்தில் 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN

கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நியூசிலாந்தில் 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரவல் மீண்டும் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு தழுவிய அளவில் அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் அழிக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாத காலமாக, நியூசிலாந்தில் கரோனா பரவல் இல்லாமல் இருந்தது. இதனிடையே, ஓக்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது இந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தென்பட்டுள்ள டெல்டா வகை கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி, சிட்னியிலிருந்து வந்த ஒருவரிடமிருந்து கரோனா பரவியது ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து ஆர்டெர்ன் கூறுகையில், "ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த நபர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். எனவே, முதன்மையாக அச்சப்பட்டது போல் அல்லாமல் கரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை. புதிருக்கான விடையை கண்டுபிடித்துள்ளோம்

ஒரே நாள் இரவில் 11 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.